ADCCI துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட இந்தியர்: குவியும் பாராட்டுக்கள்!

ADCCI member

Update: 2021-07-29 13:51 GMT

தற்போது அபுதாபி தொழில் வர்த்தக சங்கத்தின் (ADCCI) துணைத் தலைவர் பொறுப்பிற்கு லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் உச்ச தளபதி அபுதாபி வர்த்தக மற்றும் தொழில்துறை சபைக்கு (ADCCI) புதிய இயக்குநர்கள் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை வெளியிட்டார். எனவே இந்த புதிய இயக்குனர்கள் குழுவில் லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 


இந்த சங்கத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள 29 உறுப்பினர்களில்  இவர் ஒருவர் மட்டுமே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் தற்பொழுது வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அவருக்கு அபுதாபி அய்மான் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 


H.H. ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் யூசுபாலியை கௌரவிப்பதற்காக 'அபுதாபி விருது 2021' ஆம் ஆண்டிற்கான விருதை வழங்கி கவுரவித்தார். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் துறைகளில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகால பங்களிப்பிற்காக வழங்கும் மிக உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் அரபு நாட்டின் விருதாகும். இந்த விருதையும் வாங்கிய முதல் இந்தியரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://currentaffairs.adda247.com/yusuffali-to-be-abu-dhabi-ccis-vice-chairman/

Image courtesy: adda247 


Tags:    

Similar News