இந்தியாவிற்கு அகதியாக வந்து போதை பொருள் கடத்திய ஆப்கான் நபர்!

இந்தியாவிற்கு குடும்பத்துடன் அகதியாக வந்து போதைப் பொருளை கடத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர்.

Update: 2022-09-06 00:41 GMT

ஆப்கானிஸ்தானில் குடும்பத்துடன் வசித்து வந்த அகதி ஒருவர் போரின் காரணமாக பாதிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடு அமைப்பின் அகதிகளுக்கான தூதரகம் வழியாக இந்தியாவில் தற்போது புலம்பெயர்ந்து இருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் வாயிலாக ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு தான் இந்தியாவிற்கு அகதி என்ற பெயரில் வந்து இருக்கிறார். அவர் மருத்துவ விசாவில் தான் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.


இந்தியாவிற்கு வந்த இவர் தற்போது போதை பொருள் வழக்கின் கீழ் தற்போது கைதாகி இருக்கிறார். தலைநகர் டெல்லியில் வசந்த் பகுதியில் வசித்து குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படையால் இவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து சுமார் 20 கோடி மதிப்பிலான நான்கு கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அகதியாக வந்த இவர் எப்படி போதைப்பொருள் பரிமாற்றும் கும்பலுக்கு உடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


மேலும் இது குறித்து ரகசிய தகவலை பெற்ற குஜராத் போலீஸ் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்சாருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த கடத்தல் காரர்கள் மற்றும் கடத்தல் கும்பல் பற்றிய விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy:Dailythanthi News

Tags:    

Similar News