ஆப்கனிஸ்தான்: பெண்களுக்கு கல்வி முதல் ஓட்டுநனர் உரிமம் வரை தடை!
பெண்களுக்கு எதிரான தடை காரணமாக பெண்களுக்கு கல்வி முதல் ஓட்டுநனர் உரிமம் வரை தடை செய்யப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி வைத்திருந்த அந்த கொடூர ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து பல்வேறு மக்கள், பல்வேறு நாட்டுக்கு அகதிகளாக செல்ல கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது ஆனால் அங்கு இருக்கின்ற மக்கள் தற்போது தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் உள்ள பெண்களுக்கு பல்வேறு தடைகளையும் விதித்து உள்ளார்கள். ஏற்கனவே பெண்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடை பெரும்பாலான பெண்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் TV நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ள வேண்டும். ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்டதூரம் வெளியே செல்லக்கூடாது உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை ஆட்சிக்கு வந்தகையோடு தாலிபன்கள் விதித்திருந்தனர். மேலும் அண்மையில் ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்கவும் தடை விதித்து உள்ளார்கள். இப்படியாக பெண்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்களை அவர்கள் அமல்படுத்தி வருகின்றனர்.
எனில் அது தற்போது பெண்களுக்கு வழங்கப்படும் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் வழங்குவதிலும் தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் பெண்கள் காபூல் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய நகரங்களில் வாகனம் ஓட்டுவதைக் காணலாம். இருப்பினும், தாலிபன்கள் தற்போது பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதனால் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் பெருமளவில் பாதிப்பை உருவாக்கி உள்ளார்கள்.
Input & Image courtesy: Vikatan News