மீண்டும் ரியல் எஸ்டேட் முதலீட்டில் கவனம் செலுத்தும் NRIகள்!

நோய் தொற்றுக்கு பிறகு தற்போது மீண்டும் ரியல் எஸ்டேட் முதலீட்டில் கவனம் செலுத்த NRIகள் விரும்புகிறார்கள்.

Update: 2022-01-01 13:09 GMT

இந்த நோய் தொற்று காலத்தில் குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் இந்தியாவில் சொத்துக்களை வாங்குவதில் குறைந்த அளவே ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் இந்தியாவில் அவர்கள் வாங்கும் சொத்துகளின் அளவு அரசாங்கம் கட்டுப்படுத்தி இருப்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  இருந்தாலும் நோய்த்தொற்று காலத்தில் சொந்த நாட்டிற்குத் திரும்பிய  NRI-கள் பெருமளவில் உணர்ந்த ஒரு விஷயம், தங்களுக்கென்று தங்களுடைய சொந்த நாட்டில் சொத்துக்களைவைத்து கொள்ள வேண்டும் என்பதுதான்.  


இந்தியாவில் இருக்கும் 360 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதுபற்றி குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் தொழில் களில் என NRI-கள் 13.4 டாலர்களை முதலீடு செய்துள்ளார்கள். ஆனால் இந்த வருடம் இந்த எண்ணிக்கை அதிகமாகும் குறிப்பாக 15 சதவீதத்திற்கு அதிகமான டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்பொழுது இந்தியாவில் மாறியுள்ள டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு NRI கள் தங்கள் பணி புரியும் நாடுகளில் இருந்தே, இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றம் மறுப்பதற்கு இடம் இல்லை. மேலும் குறிப்பாக இந்திய அரசாங்கமும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு பெருமளவில் வரவேற்கிறது. எனில் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.  

Input & Image courtesy: Economic times

 





Tags:    

Similar News