இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் !
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.;
நம் நாட்டு வேளாண் பொருட்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் மவுசு தனிதான் என்று சொல்லலாம். குறிப்பாக விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் வாய்ந்த உணவு பொருட்கள் அங்கு மிகவும் பிரபலம் வாய்ந்தது. எனவே இந்திய வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு குறித்த தகுந்த ஆலோசனை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த ஆய்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்று ஜோர்டான் நாட்டின் இந்திய தூதர் மூலமாக நடைபெற்றது.
இந்திய-ஜோர்டான் வர்த்தகர்கள் கூட்டம் காணொலி வழியாக நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஜோர்டான் நாட்டுக்கான இந்திய தூதர் அன்வர் ஹலீம் தலைமை வகித்தார். இதில் இந்திய வேளாண் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள், ஜோர்டான் வர்த்தக சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் மூலம் இந்திய பொருட்களின் ஏற்றுமதி ஜோர்டான் நாட்டுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்கள் மூலம் நாட்டில் அன்னிய செலவாணி உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஜோர்டான் மட்டும் இந்திய நாட்டிற்கு இடையில் நடைபெற்ற இந்த வணிக ஆலோசனைக் கூட்டம் மூலமாக இனி நடக்கவிருக்கும் விவசாய பொருட்களை ஏற்றுமதி குறித்து நல்ல முன்னேற்றம் அடையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Input: https://twitter.com/IndiainJordan/status/1420008251312201732?ref_src=%5Etfw
Image courtesy: twitter post picture