அமெரிக்காவை கலக்கிவரும் சென்னையைச் சேர்ந்த FreshWorks நிறுவனம் !

அமெரிக்காவில் சாதித்து வரும் சென்னையைச் சேர்ந்த FreshWorks நிறுவனம்.

Update: 2021-09-25 13:15 GMT

திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் 11 வருடத்திற்கு முன்பு உருவாக்கிய FreshWorks மென்பொருள் நிறுவனம். இன்று நாஸ்டாக் சந்தையில் பட்டியலிட்டு முதல் நாளே மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து மாபெரும் வெற்றியையும் பதிவு செய்துள்ளார். 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் IPO வெளியிட்ட FreshWorks நிறுவனம் முதல் நாளே சிறப்பான வரவேற்பு பெற்ற காரணத்தால் அதிகப்படியாக ஒரு பங்கு விலை 33 சதவீதம் வரையில் உயர்ந்தது . இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்பது 13 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இந்த நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.  


இதுகுறித்து FreshWorks நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEOவான கிரிஷ் மாத்ருபூதம் இதுபற்றி கூறுகையில், "நாஸ்டாக் பங்குச்சந்தையில் முதல் நாளே 33 சதவீத வளர்ச்சியைப் பார்க்கும் போது இந்திய விளையாட்டு வீரர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று கூறினார். 2010ஆம் ஆண்டுக் கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் கிருஷ்ணசாமி இருவரும் சேர்ந்து நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மென்பொருளை உருவாக்க வேண்டும் என்பதற்காக Freshdesk என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 2017ல் இந்த நிறுவனம் Freshworks நிறுவனமான உருமாற்றம் அடைந்தது. 


தற்போது கிரிஷ் மாத்ருபூதம் தலைமையில் FreshWorks நிறுவனம் சுமார் 11 வருடமாக இயங்கி வரும் நிலையில், இந்நிறுவனம் சென்னை, கலிபோர்னியா ஆகிய இரு இடங்களை Dual Headquaters என்ற அடிப்படையில் தனது தலைமையிடத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. SAAS பிரிவில் இயங்கி வரும் FreshWorks நிறுவனம் அமெரிக்காவின் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்துடன் போட்டிப்போடும் காரணத்தால் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலும் தற்போது தலைமையிடத்தை அமைத்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் பெரும் பகுதி டெக் மற்றும் ஆப்ரேஷன்ஸ்காக  ஊழியர்கள் சென்னை பெருங்குடி பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். 

Input & Image courtesy:Economic times



Tags:    

Similar News