அமெரிக்காவில் பெண்கள் மூலமாக நடைபெற்ற தமிழ் புத்தக கண்காட்சி !

அமெரிக்காவில் முற்றிலும் பெண்கள் மூலமாக நடைபெற்ற தமிழ் புத்தக கண்காட்சி விழா.

Update: 2021-09-08 14:02 GMT

அமெரிக்காவில் முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், தற்போது மிகவும் சிறப்பான முறையில்  புத்தகக் கண்காட்சி நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த கண்காட்சிக்கு மிகவும் உதவியாக உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் முனைவர் தி.அமிர்தகணேசன் அவர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். மேலும் தற்பொழுது சென்னைப் புத்தகக் கண்காட்சி அளவிற்குப் பெரிய கண்காட்சியாக இந்த அமெரிக்கக் கண்காட்சியும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், உறுப்பினர்களின் மேற்பார்வையில் இந்த புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 


மேலும் இந்தக் கண்காட்சியின் அமைப்பாளர் சார்லட்டைச் சார்ந்த இரம்யா ரவீந்திரன். தமிழகத்திலிருந்து புத்தகங்களை விவேகானந்தன் இராசேந்திரன் மற்றும் மஞ்சுளா காந்தி பெற்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். தொடர்ச்சியாக இந்த புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 14, 2021 அன்று காலை 10 மணி அளவில், சார்லட்டில் உள்ள பிராங்க் லிஸ்க் பூங்காவில் ஹார்ட்செல் என்ற குடிலில் தொடங்கியது. இந்த நிகழ்வின் நேரலையைக் கீழ்காணும் யூடியூப் சேனல் வழியாகவும் காணலாம். 

https://www.youtube.com/watch?v=LaUvHgaMlzA



தமிழக எழுத்தாளர்களை அமெரிக்க மண்ணில் கொண்டாடப்படுவதைப் போல, அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மண்ணில் கொண்டாடப்படக் கூடிய நாளும் வரும் என்று நிகழ்ச்சியில் கூறப்பட்டது. அடுத்ததாக, அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட "கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்" என்ற எளிய இலக்கண நூல் வெளியிடப்பட்டது. 

Input  courtesy:dinamalar



Tags:    

Similar News