தாய்லாந்து நோக்கி படையெடுக்கும் தொழில் முனைவோர் - ஏன்?

ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும்.

Update: 2022-08-04 02:58 GMT

தற்போது ஆசியாவில் தாய்லாந்து நாட்டில் மட்டும்தான் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டபூர்வமாக்கி உள்ளது. மரிஜுவானா என்பது கஞ்சா வகையான செடி ஆகும். மேலும் இதன் தேவை உலக அளவில் பிரம்மாண்டமான தேவைகளை பணமாக முயற்சிக்கும் தாய்லாந்து தொழில் முனைவோரின் ஒரு ஆசையை நிறைவேற்றி உள்ளது. இதன் காரணமாக இந்த நாட்டின் சுற்றுலாவில் பெருமளவு பயணிகளை கவரும் என்று எதிர்பார்க்கப் பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் தாய்லாந்தில் ஏற்பாடு செய்ய மக்கள் விரும்புவதாக ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது. 


தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும். கஞ்சா வகையான செடியில் சட்டபூர்வமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அதை பயிரிடுவதற்கு, பிரித்தெடுத்தல் இருக்கும் இந்த தடையை தற்போது நீக்கியுள்ளது. பொழுதுபோக்கு நோக்கங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது உல்லாசமாக சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மத்தியில் இந்தப் ஒரு செய்தி இனிப்பானதாக இருக்கின்றது.  


எனவே சர்வதேச நாடுகளில் இருந்து சுற்றுலாவிற்கு வரும் தாய்லாந்து நாட்டிற்கு பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சுற்றுலா பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தந்துள்ளார்கள். இந்த பொருத்தி ஈர்ப்பின் காரணமாக சுற்றுலாத்துறையின் மதிப்பு 52.63 பில்லியன் அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News