ஆஸ்திரேலிய அரசு: NRI பயணிகளின் வருகைக்கு முழு அனுமதி!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வருகைக்கு அனுமதி வழங்கிய ஆஸ்திரேலிய அரசு.

Update: 2022-02-08 14:18 GMT

வெளிநாட்டு வாழ் மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக அனுமதி வழங்காத ஆஸ்திரேலியா தற்பொழுது தனது எல்லைகளை முழுமையாக பிப்ரவரி மாதம் 21ம் தேதியில் இருந்து மீண்டும் திறக்கும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் திங்களன்று கூறினார். புதிய கொரோனா வைரஸின் பரவலை மெதுவாக்குவதற்காக குடிமக்கள் அல்லாதவர்களுக்கு எல்லையை மூடிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன்கள் ஆஸ்திரேலியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை மற்ற நாடுகளைவிட குறைப்பதற்கு இந்த வழிகளை அரசாங்கம் கையாண்டது.இதன் காரணமாக அங்கு நோய்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.


ஆனால் சமீபத்திய வாரங்களில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அரசு தன்னுடைய எல்லைகளில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்க மறுத்தது. நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் முதல் Omicron வழக்கு கண்டறியப்பட்டதில் இருந்து சுமார் 2.4 மில்லியன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவரை, ஆஸ்திரேலியா சுமார் 200,000 வழக்குகளை எண்ணியது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்த இறப்புகள் 4,248 ஆக உள்ளது.


ஆனால் தற்பொழுது அங்கு நோய் தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக ஆஸ்திரேலிய அரசு தற்போது வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் இந்த அறிவிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விமான போக்குவரத்து அனைத்தும் மும்மரமாக தங்களுடைய பயணிகளின் வருகை காவல் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. புலம்பெயர்ந்தோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் பேக் பேக்கர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலிய எல்லையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

Input & Image courtesy: Economic times

Tags:    

Similar News