இந்தியா வந்துள்ள வங்காள பிரதமர் - இருநாட்டு தலைவர்களும் முக்கிய பேச்சு வார்த்தை!

இந்தியா வந்துள்ள வங்காள பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பிரதமர் மோடி அவர்களும் தீவிரப் பேச்சு வார்த்தையில் இன்று உள்ளார்கள்

Update: 2022-09-07 03:00 GMT

நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவை வந்தடைந்த வங்காள பிரதமர் சேக் ஹசீனா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று சந்திக்க உள்ளார். மேலும் அவருடைய இந்த சந்திப்பில் பல்வேறு தரப்பில் பேச்சுப் வார்த்தைகள் நடைபெற உள்ளன. மேலும் இந்த பேச்சுவார்த்தை தீவிர பேச்சுவார்த்தையாக மாறி பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இந்த சந்திப்புக்கிடையே ஏழு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் வங்காளத்துக்கு இடையே கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை வங்காள பிரதமர் இந்தியாவிற்கு வருகை புரிந்தது கிடையாது. தற்போது முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை புரிந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இருநாட்டு தலைவர்களும் முன் வர உள்ளார்கள் என்று வட்டார தரப்பில் கூறப்படுகின்றது. மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பாதுகாப்பு பொருளாதாரம் நதிநீர் இணைப்பு தொழில்நுட்ப பகிர்வு போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.


இந்தியாவை வந்தடைந்த வங்காள பிரதமர் சேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உதவியை நாடி வங்காள பிரதமர் வந்து இருக்கிறார் வங்காளத்தில் குடியேறி இருக்கும் ரோஹிங்கியாக்ளின் எண்ணிக்கை 11 லட்சத்திற்கு அதிகமாக உள்ளார்கள். அவர்களை திரும்பி மியான்மருக்கே அனுப்பும் முயற்சியில் இந்தியா, வங்காளத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான டிஸ்டாநதி நீரை பகிர்ந்து கொள்வது குறித்தும் தற்போது விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Polimer news

Tags:    

Similar News