அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ஈரான்: தூதரகம் மீது 12 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்!

ஈரானிய எண்ணெய் டேங்கர்களை பிடென் கைப்பற்றிய பின்னர் இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்க தூதரகம் மீது 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

Update: 2022-03-15 14:23 GMT

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கான அனைத்து அரசியல் ரீதியாக தீர்மானங்கள் முடிவடைந்துவிட்டன என்று தோன்றியது. இருப்பினும், விஷயங்கள் திடீரென்று மோசமாக மாறியது. மேலும் சமீபத்திய அறிக்கையின்படி, ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாக இரண்டு டேங்கர்களின் சரக்குகளை அமெரிக்கா சமீபத்தில் கைப்பற்றியது ஈரான் உடையை எண்ணெய் இடங்களை கைப்பற்ற அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க அதிபர் ஒப்புதலின் பேரு அது கைப்பற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தற்போது நடந்து கொண்டுள்ளது. 


மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க தூதரகம் மீது 12 ஏவுகணைகளை வீசி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வராததால், ஈரான் தனது பழைய நடைமுறைகளுக்கு திரும்பியுள்ளது.ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விவாதங்கள் நிறுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, வடக்கு ஈராக்கில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், சவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாகவும் கூறியது. 


ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதில் முக்கியமானதாக இருக்கும் அமெரிக்கா, ஈராக்கின் எர்பில் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதலைக் கண்டித்தது. ஆனால் அமெரிக்கா தற்போது ஈரான் நாட்டின் எண்ணெய் டேங்கர்கள் கைப்பற்றிய நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் முடிவெடுக்க உலகநாடுகள் தற்பொழுது திட்டமிட்டுளளது. 

Input & Image courtesy: TFI Global News

Tags:    

Similar News