சட்டப்பேரவை தேர்தல்: NRI ஆதரவைப் பெற டிஜிட்டல் பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க!
உ. பி சட்டப் பேரவை தேர்தலுக்காக, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆதரவு பெற டிஜிட்டல் பிரச்சாரத்தை துவங்கி பா.ஜ.க.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்திற்காக உலகம் முழுவதும் குடியேறிய வட இந்தியர்களை பா.ஜ.க தேடி வருகிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அவர்கள் சனிக்கிழமை இங்குள்ள மாநில தலைமையகத்தில் ஆப்கி பாரி உத்தரப் பிரதேசம் 'மே ராம் ராஜ்ய கி தய்யாரி' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார். வெளியீட்டு விழாவின் போது பா.ஜ.க மூத்த துணைத் தலைவர் மாதவ் பண்டாரி மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் பாரதியா ஆகியோர் உடனிருந்தனர்.
பிரச்சார ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குப்தா இதுபற்றி கூறும்போது, "உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பங்களிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். எனவே, தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்குச் செல்ல முடியாதவர்கள் டிஜிட்டல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் செய்தியையும் பா .ஜ.கவுக்கு ஆதரவையும் தெரிவிக்கலாம். குப்தா மேலும் கூறுகையில், "2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பா.ஜ.கவின் பிரச்சாரத்தில் தங்களுடைய சொந்த வழியில் பங்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் வலுவான நெட்வொர்க் எங்களிடம் உள்ளது" கடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் கூட, NRIக்கள் உதவிக்கரம் நீட்டினர் என்று பா.ஜ.கவின் தலைவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள பல முக்கிய தொகுதிகளில் மகாராஷ்டிர பா.ஜ.க தொண்டர்கள் குழுவும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பல பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தனித் தொழிலாளியும் அவர்களது சொந்த கிராமங்கள் மற்றும் தாலுகாக்களில் உள்ள 25 முதல் 50 வீடுகளுக்குச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Input & Image courtesy: Indianexpress