கொரோனா காரணமாக இந்தியப் பள்ளிகளில் அதிகமாக சேர்க்கப்படும் NRI மாணவர்கள் !

தற்போது உள்ள நோய் தொற்று காரணமாக இந்தியப் பள்ளிகளில் அதிகமாக சேர்க்கப்படும் NRI மாணவர்கள்.

Update: 2021-08-27 13:40 GMT

குறிப்பாக தற்போது இந்திய பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வேலையின்மை மற்றும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி காரணமாக இது தொடர்ந்து உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், அதே நாட்டில் தங்களுடைய குடும்பத்துடன் சென்று அங்கே இருக்கும் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைப்பதுதான் வழக்கம். ஆனால் தற்போது தற்போது உள்ள நோய் தொற்று காரணமாக பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை இல்லாமல் தவிர்க்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அங்கு ஆகும் செலவை பொருட்படுத்த முடியாமல் மீண்டும் இந்தியாவிற்கு வந்து தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வருகிறார்கள். 


இது தொடர்பாக NRI ஒருவர் கூறுகையில், "வேலையை இழந்த பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன் துபாயில் இருந்து மங்களூருக்கு மாற்ற பட்டோம். என் கணவர் இன்னும் துபாயில் இருக்கிறார். நிதி நெருக்கடியால் நான் வேலையை இழந்தேன். அதனால், எனது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக இந்தியா திரும்ப முடிவு செய்தேன். கல்வி இங்கே மிகவும் மலிவானது. துபாயில் ஒரு குழந்தையின் கல்விக்காக நாங்கள் செலவிட்டதை இரண்டு குழந்தைகளுக்காக செலவிடுகிறோம்" என்று அவர் கூறினார்.


கடந்த சில ஆண்டுகளாக NRI பெற்றோரின் குழந்தைகளின் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால் தொற்றுநோய்க்குப் பிறகு இது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் வேலை இழப்பு காரணமாகவே இது நிகழ்கிறது என்று அவர் கூறினார். பத்தாம் வகுப்பு அல்லது இளங்கலை படிப்புக்குப் பிறகு NRI மாணவர்கள் இந்தியாவிற்கு கல்வி கற்க வருவது வழக்கம் என்றாலும், போக்கு மாறி வருகிறது. "நாங்கள் இப்போது ஐந்தாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை CBSE அல்லது ICSE பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்கள். இந்த ஆண்டு மட்டும், நாங்கள் 40 NRI மாணவர்களை சேர்த்துள்ளோம்" என்று மவுண்ட் கார்மல் மத்திய பள்ளியின் முதல்வர் சகோதரி மெலிசா கூறினார்.

Input: https://m.timesofindia.com/city/mangaluru/rise-in-nri-students-admitted-in-mluru-schools/amp_articleshow/85665671.cms

Image courtesy:times of India


Tags:    

Similar News