ஆப்கன்: தொடர்ந்து காபூலில் இருந்து இந்தியா திரும்பும் NRIகள் !

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தில், அங்கிருந்து இந்தியர்களை மட்டுமல்லாது சீக்கியர்கள் மற்றும் ஆப்கன் மக்களையும் அழைத்து வரும் இந்திய விமானப்படை.

Update: 2021-08-24 13:53 GMT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தொடர்ச்சியாக அங்கிருந்து இந்திய மக்களை வெளியேற்றும் நோக்கில் விமானப்படை முழு மூச்சாக செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் அங்கு சென்றுள்ளது. காபூலில் இருந்து நாடு திரும்பும் சீக்கியர்கள் குருத்துவாரவில் வைக்கப்பட்டிருந்த தங்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பையும் எடுத்து வந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


ஏற்கனவே அங்கு இந்திய விமானப்படையின் C-17 விமானம் சென்றிருந்தது. அங்கு இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் பின்னர் இந்தியா வந்தடைந்தனர் குறிப்பாக இந்திய விமானப் இந்தியர்களை மட்டுமல்லாது ஆப்கன் நாட்டைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். 


இந்தியர்கள் மட்டுமின்றி ஆப்கன் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். இந்தநிலையில் காபூலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது. எனவே காபூலில் உள்ள இந்தியர்கள் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர். காபூல் குருத்வாராவில் பாதுகாப்பு கருதி தங்கியிருந்த அவர்கள் பின்னர் காபூல் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை ஏற்றி வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது. அவர்கள் குருத்துவாரவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பையும் தங்களுடன் இந்தியாவிற்கு எடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input:https://www.indiatoday.in/india/story/iaf-indians-afghan-sikhs-hindus-guru-grant-sahib-kabul-afghanistan-1844337-2021-08-23

Image courtesy:India today


Tags:    

Similar News