சென்னையில் அதிகமான சொத்துக்களை வாங்க நினைக்கும் NRIகள் !

பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் அதிகமான சொத்துக்களை வாங்க நினைக்கும் NRIகள்.

Update: 2021-09-20 12:57 GMT

வெளிநாடுகளில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் அதிகமான சொத்துக்களை வாங்க நினைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் தான் அவர்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம்.  CII நுகர்வோர் உணர்வு கணக்கெடுப்பின்படி, கொரோனாவுக்கு பிறகு பெரும்பாலான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்(NRI) இந்தியாவில் தங்களுக்கென அதிகமான சொத்துக்களை வாங்க நினைக்கிறார்கள் என்று முடிவு கூறுகிறது. வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவில் சொத்துக்களை வாங்கும் NRIகள் பதிலளித்தவர்களில் குறைந்தது 53% பேர் சுய பயன்பாட்டிற்கான சொத்துக்களை வாங்குகிறார்கள். 


அதே நேரத்தில் 47% முதலீட்டிற்காக வாங்குவதைக் கருத்தில் கொள்வார்கள்.  பெரும்பாலும் முன்பு இருந்த காலகட்டங்களில் பெரும்பாலான NRIகள், பங்குச்சந்தையில் தங்களுடைய முதலீடுகளை செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனாவுக்கு பிறகு அவருடைய விருப்பம் தலைகீழாக மாறியுள்ளது.  இந்தியாவின் பெரும் சொத்து பணமாக்கல் திட்டத்தின் அறிக்கையின்படி, NRIகளில் இந்த மாற்றத்திற்கு முக்கியமாக பல காரணிகள் உள்ளது. அதிலும் குறிப்பாக நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் பல NRIக்கள் இந்தியாவுக்குத் திரும்ப முயன்றனர்.  


கணக்கெடுப்பு குறித்து, CII அனரோக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி அவர்கள் இதுபற்றி கூறுகையில், "கொரோனா வருவதற்கு முந்தைய சமீபத்திய ஆண்டுகளில், பல NRIக்கள் பொருளாதாரம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு மத்தியில் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் இருந்தனர். தொற்று நோய்க்கு பிறகு, அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர சொத்துக்களுக்கு அதிக தேவை இருப்பதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், NRIகளின் ஆர்வம் சென்னையில் அதிகரித்து வருவதை குறிப்பிடுகின்றன" என்று அவர் கூறினார். 

Input & Image courtesy: Livemint news

 


Tags:    

Similar News