உலக அளவில் இணையதளம் மூலம் கொண்டாடப்பட்ட சென்னை தின விழா !

உலகளாவிய பழந்தமிழர் குழு சார்பாக இணையம் வழியாக சென்னை தின விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-08-23 13:36 GMT

உலகளாவிய இளந்தமிழர் குழு சென்னை தினத்தை இணையவழியில் நடத்தியது. சென்னை தின விழா என்பது சென்னையின் பாரம்பரியம் மற்றும் அதனுடைய பெருமைகளை எடுத்துரைக்கும் விழாவாக இது அமைந்தது. சென்னையின் வரலாற்றை பற்றி கோ அறக்கட்டளையை சேர்ந்த வசந்த் வெள்ளைதுரை எடுத்துக் கூறினார். அடுத்ததாக இந்த விழா பல்வேறு நாடுகளில் வாழும் மாணவ, மாணவியருக்கு சென்னையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைந்தது. விழாவின் இடையில் இந்தியா, கொரியா, குவைத் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளனர்.


விழாவின் முக்கிய பேச்சாளரான, இந்தக் குழுவின் ஆலோசகரா ஒரிசா பாலு, சென்னை என்பது 382 வருடங்கள் பழமையானது மட்டுமல்லாமல் அது லட்சக்கணக்கான வருடங்கள் பழமையானது என்பதை எடுத்துக்கூறி தன்னுடைய உரையை தொடங்கினார் குறிப்பாக அவர் தன்னுடைய களத்தில் சென்னை எப்படி இருந்தது? தற்போது எப்படி உள்ளது? என்பது பற்றி அவர் எடுத்துக் கூறினார். குறிப்பாக சென்னையில்தான் முதல் மருத்துவக் கல்லூரி தடயவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் எடுத்துக்கூறினார்.


மேலும் மெட்ராஸ் அப்சர்வேட்டரி பக்கத்தில் உள்ள 12 அடி தூண், அதில் எழுதப்பட்ட நான்கு மொழி கருத்து பற்றியும் எடுத்துக் கூறினார். சென்னையை பற்றி மட்டும் பல வரலாற்றுச் செய்திகள் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. தொல் பழங்காலத்திலிருந்தே சென்னை இருக்கும் இடம் மிகவும் சிறப்பான இடமாக இருந்ததைப் பற்றி இந்த கருத்தரங்கில் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டனர். 

Input:https://ilantgamizhar/ photo//

Image courtesy:wikipedia 


Tags:    

Similar News