ஆப்கானில் இருந்து திரும்பிய இந்திய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா ?

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து நாடு திரும்பிய இந்திய விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-22 13:27 GMT

உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய செய்தியை தான். ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்தது தலிபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை அடுத்து அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. 


மேலும் அங்குள்ள மக்கள் கூட வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்டு 14ம் தேதி முதல் இதுவரை 13 ஆயிரம் பேரை அமெரிக்க அரசு மீட்டுள்ளது. இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி இதுகுறித்துக் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து இந்திய விமான படையை சேர்ந்த C17 ரக விமானம் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அந்த விமானம் இன்று காலை காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் வந்திறங்கியது. 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுக்கு கொரோனா பாதிப்புக்கான RD-PCR பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://www.dailypioneer.com/2021/state-editions/rt-pct-test-rates-revised-in-uttarakhand.html

Image courtesy:wikipedia


Tags:    

Similar News