ஜோர்டான்: இந்திய சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடிய மக்கள் !

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஜோர்டன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளனர்.

Update: 2021-08-18 13:56 GMT

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஏற்கனவே அங்கு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பாக தொடங்கி விட்டன என்றே கூறலாம். எனில் அவ்வப்பொழுது இந்தியாவின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக மற்றும் அங்குள்ள மக்களுக்கு அதனுடைய தனித்துவத்தை புரியவைக்கும் நோக்கிலும் பல நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 


இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல விழாகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் இந்திய தூதர் அன்வர் ஹலீம் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு அங்குள்ள மக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 



அதன் பின்னர் இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையில் இருந்து முக்கிய பகுதிகளை இந்திய தூதர் தன்னுடைய உரையின்போது வாசித்தார். மேலும் அங்கு இந்தியாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அங்கு வாழும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று இருந்தனர். 

Input:https://twitter.com/IndiainJordan/status/1427642944610258948?ref_src=twsrc%5Etfw

Image courtesy: twitter posted picture 

 

Tags:    

Similar News