NRIகளுக்கு மகிழ்ச்சி செய்தி: சென்னையில் இருந்து நேரடி பயணிகள் விமான சேவை தொடக்கம் !

நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னையில் இருந்து நேரடியாக லண்டன் செல்லும் விமான சேவை இன்று முதல் துவங்கி உள்ளது.

Update: 2021-09-02 13:46 GMT

நோய் தொற்று காரணமாக இதுவரை நிறுத்தி வைக்கப்பட்ட NRIகளுக்கான சென்னையிலிருந்து லண்டன் செல்லும் நேரடி விமானச் சேவைகள் தற்போது மீண்டும் தொடங்க உள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து அதிகமான தமிழர்கள் தங்களுடைய படிப்பிற்காக மற்றும் வேலைக்காக லண்டன் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இருந்தாலும் அங்குள்ள சூழ்நிலைகள் காரணமாக நேரடி விமானப் போக்குவரத்து சேவை இதுவரை வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் சென்னை மற்றும் லண்டன் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. 


மேலும் இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமாக செய்தி அறிவிப்பின் படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா, பிரிட்டன் இடையே பயணிகள் விமானப் போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியோடு நிறுத்தப்பட்டது. அதன்பின் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த அளவில்தான் விமானங்கள் இயக்கப்பட்டன.  சென்னையிலிருந்து லண்டனுக்கு நேரடியாக பயணிகள் விமானச் சேவை இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தோடு நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் இரு நாடுகளிலும் வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து, மீண்டும் சென்னை – லண்டன் நேரடி பயணிகள் விமான சேவையைத் தொடங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்முடிவு செய்துள்ளது. லண்டன் முதல் சென்னை வரையிலான நேரடி விமான சேவை வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விமானச் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Input:https://www.india.com/business/international-flights-latest-news-today-2-september-2021-british-airways-to-resume-chennai-london-flights-from-today-check-full-schedule-air-travel-latest-update-vande-bharat-mission-4928811/

Image courtesy:India today


Tags:    

Similar News