பல நாட்டு கவிஞர்கள் பங்கேற்ற இந்திய விடுதலை நாள் சிறப்புக் கவியரங்கம் !
பல நாட்டு கவிஞர்கள் பங்கேற்ற இந்திய விடுதலை நாள் சிறப்புமிக்க நிகழ்ச்சி.
சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்திய விடுதலை நாள் சிறப்பு கவியரங்கத்தை இணையவழி மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த கவியரங்கத்தில் குறிப்பாக சிங்கப்பூர், இந்தியா, ஸ்விட்ஸர்லாந்து நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பத்துப் பேர் பங்கேற்றனர். இந்தியாவின் விடுதலை நாளை கொண்டாடும் வகையில் இந்த கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் தானாக கிடைத்துவிடவில்லை அதற்குப் பின்னால் பல தலைவர்களின் தியாகங்கள் அடங்கியிருக்கின்றன.
பல நாட்டு கவிஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில் குறிப்பாக ஐம்பூதங்களின் பற்றிய கவிதைகள் இடம்பெற்றிருந்தன. சியாமளா ரகுநாதனின் நிலம் என்ற தலைப்பிலான கவிதை. ஸ்விட்ஸர்லாந்துக் கவிஞர் சரளா அவர்களின் 'காற்று' என்ற தலைப்பிலும், ஓசூர் கவிஞர் மணிமேகலை 'வானம்' என்ற தலைப்பிலும், நெருப்பு என்ற தலைப்பில் சிங்கப்பூர் கவிஞர் ராஜி ஸ்ரீநிவாசன் ஆகியோரும் கவிதைகள படைத்தனர்.
இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஓசூரிலிருந்து ராமசாமி, ஜெர்மணியிலிருந்து கெங்கா ஸ்டான்லி ஆகியோர் கவியரங்கை பற்றிய தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். கவியரங்கம் இரண்டு அங்கங்களாக நடைபெற்றது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்டு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் கவிஞர்களின் ஊக்குவிக்கும் விதமாக இந்த கவியரங்கம் நடைபெற்றது.
Input:http://www.ilakkiyapozhil.com/
Image courtesy:wikipedia