இந்தியாவில் உள்ள NRI-களை மீண்டும் அனுமதிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் !
ஐக்கிய அரபு அமீரகம் தற்பொழுது இந்தியாவிலுள்ள NRIகளை தங்களுடைய நாட்டுக்குள் பயணம் மேற் கொள்ள அனுமதிக்கிறது.
ஏற்கனவே வளைகுடா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகள் குறைந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 1,000 க்கும் குறைவான பாதிப்புகள் தற்போது முதல் முறையாகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாகத் தற்பொழுது திங்கள்கிழமை முதல் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனைத்து நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களுடைய நாட்டிற்கு வருவதற்கான வழிவகை தற்பொழுது செய்து உள்ளது. குறிப்பாக நோய் தொற்று காரணமாக UAE-யில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அவற்றை மீட்கும் பொருட்டு தகுதியானவர்கள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகளில் ஒன்றில் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும். இதில் அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, ஃபைசர், சினோஃபார்ம் மற்றும் சினோவாக் ஆகியவை அடங்கும்.
முன்னர் தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்று UAE சார்பில் கூறப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வரும் பயணிகள் விமான நிலையத்தில் கட்டாய PCR சோதனை எடுக்க வேண்டும் என்று அது மேலும் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் உட்பட ஏழு எமிரேட்களைக் கொண்டுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் வாழ்க்கை பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், முகமூடி அணிவது மற்றும் சமூக இடைவெளியில் தொடர்ந்து கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளது.
Image courtesy: economic times