சிங்கப்பூரில் அகழ்வாராய்ச்சி பொருட்களை திருடியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட NRI !
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் உள்ள அகழ்வாராய்ச்சி திருடிய குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்தகுமரன் லோகநாதன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள அகழ்வாராய்ச்சி பொருட்களை திருடிய குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 44 வயதான இவர் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் கனரக வாகனம் பழுதுபார்க்கும் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். அப்படி ஈடுபட்டு வரும் நிலையில் இப்போது சிங்கப்பூரில் உள்ள அகழ்வாராய்ச்சிப் பொருட்களை திருடி மற்றவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
2018ஆம் ஆண்டு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. தான் செய்த குற்றம் சிங்கப்பூர் போலீசுக்குத் தெரிய வந்தவுடன் இவர் மலேசியாவிற்கு தப்பி சென்று அங்கு தலைமறைவாகியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது 2018ஆம் ஆண்டு செய்த குற்றத்திற்காக இவர் இப்பொழுது 2021 கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த வியாழக்கிழமை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின் படி, சுமார் 31,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள கனரக கட்டுமான உபகரணங்களை அவர் எப்படி திருடினார்? என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. சிங்கப்பூரில் கட்டுமானப் பணிகளின்போது கிடைக்கப்பெற்ற அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் விற்பனை செய்துள்ளது என்று இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image courtesy:times of India