பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தின் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் - இந்திய எல்லையில் பரபரப்பு?

இந்தியாவில் எல்லையில் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Update: 2022-08-21 00:42 GMT

ஜம்மு சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் பயங்கரவாதிகளுக்காக வீசப்பட்டதாகக் கூறப்படும் வெடிமருந்துகளை இன்று போலீஸார் கைப்பற்றினர். மேலும் கைப்பற்றப்பட்ட அந்த ஆயுத பைகளில் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டு, பின்பு வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் ஆயுதப் பாக்கெட்டை திறக்கப்பட்டது. அதில் ஒரு ஏகே-துப்பாக்கி, ஒரு மேகசின், 40 ரவுண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 ரவுண்டுகள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அர்னியா செக்டரில் ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் வீசப்பட்ட வழக்கில் பயங்கரவாதியின் பெயர் விசாரணையின் போது வெளிவந்ததை அடுத்து, மீட்பு நடவடிக்கை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி கூறினார். ஜம்முவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், பாகிஸ்தானை சேர்ந்த கைதியாக இருக்கும் ஒரு நபர் தான் இத்தகைய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்திய எல்லைப்பகுதிகளில் ஆயுதங்களை பரிமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட நபருடன் போலீசார் சென்று அங்கு அவர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்து இருக்கிறார்?என்ற தகவலுக்காக பின் தொடர்ந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் போலீசில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மிரட்டினார். இதன் காரணமாக அவரை சமாளிக்கும் விதமாக அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் உட்பட பல காவல்துறை அதிகாரிகளும் காயம் அடைந்து உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News