கனடாவில் வசிக்கும் தமிழருக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ஷ்டம் !
கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு லாட்டரி டிக்கெட் மூலம் $100,000 மதிப்புள்ள தொகை கிடைத்துள்ளது.;
கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் சுமார் $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,62,51,236) கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசித்து வருபவர் கோபாலநாதன் சதாசிவம். இவர் வால்மார்ட்டில் உள்ள CNIP கியோஸ்க்கில் 1 கனடிய டாலர் செலவு செய்து லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அவர் வாங்க லாட்டரி டிக்கெட்டிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அதாவது அவர் வாங்கிய லொட்டரிக்கு சுமார் $100,000 கனடிய டாலர்கள் பரிசு தொகை விழுந்துள்ளது. சுமார் 59 வயதான கோபாலநாதன் சதாசிவம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில், "இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் எனது மனைவியிடம் கூறியதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளிடம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
லொட்டரி மூலம் வென்ற பணத்தை வைத்து தனது சில பில்களை கட்டுவதோடு மீதமுள்ள பணத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாகவும்" கோபாலநாதன் சதாசிவம் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பான சூழல் நிலவும் பொழுது குடும்பத்துடன் விடுமுறைக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Input & Image courtesy:IFTAMIL