போர் பயிற்சிக்கு தயாராகும் சீனா: உச்சகட்ட பதட்டத்தில் தைவான்?
போர் பயிற்சிக்கு தயாராகும் விதமாக சீனாவின் நடவடிக்கை தொடர்ந்து உச்சகட்ட பதட்டம் நிலவுகிறது.
சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ள பல்வேறு சூழ்நிலைகளில் முயற்சி செய்து வருகின்றது. ஆனால் அது நடைபெறாத வகையில் பல்வேறு மிதமான தங்களுடைய கருத்துக்களை தைவான் நாடு சீனாவிற்கு தெரிவித்து வந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போது அமெரிக்கா சபாநாயகரான நான்சி பெலோசி நேற்று தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். மேலும் இவருடைய இந்த பயணத்தை குறித்து சீனா தற்போது பெரும் அதிருப்தியில் இருந்து வருகிறது. காரணம் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது தனக்கு ஆதரவாக இருப்பது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், எனவே தங்களுடைய நானும் உறவை சரி பார்க்க தவறி விட்டு அமெரிக்கா தற்போது தைவான் நாட்டுடன் கைகோர்க்கும் முயற்சிக்கிறது இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை போர் ஒத்திகை நடைபெறும் என சீனா அறிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக போர் பயிற்சிக்காக தீவை சுற்றி உள்ள ஆறு முக்கியமான பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
உலகில் மிகவும் பரபரப்பான நீர் வழித் தடங்களில் ஒன்றான தைவான் நாட்டின் அருகில் இத்தகைய ஒத்திகை பயிற்சி நடைபெறுவது உலக நாடுகளில் உற்றுநோக்க வைத்துள்ளது. மேலும் தனக்கு அச்சம் ஏற்படும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போரினால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை உலக சந்தையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Input & Image courtesy: Zee Tamil