சீனாவை விட்டு வெளியேறும் சிப் நிறுவனங்கள்: இந்திய முதலீடுகள் அதிகரிக்குமா?

சீனாவில் இருந்து பெருமளவில் வெளியேறும் சிப் நிறுவனங்கள், இந்தியாவில் அதிகரிக்கும் முதலீடுகள்.

Update: 2022-02-21 14:33 GMT

உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறத் தொடங்கி சில காலம் ஆகிறது. சீனா மையமாகக் கொண்டு பிற நாடுகள் முதலீடுகளை சீனாவில் குவிப்பது தங்கள் நாட்டின் முதலீடுகளுக்கும் மற்றும் மக்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் புரிய வைத்து விட்டது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் கடுமையான இடையூறுகள், பெரும் பற்றாக்குறை, சீனாவில் குறைந்து வரும் வெளிப்படைத்தன்மை, நம்ப முடியாத IPR கொள்கைகள், திறமை இழப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்ற சீன நிறுவனங்களுக்கு கசிவு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும், சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்கள் போன்ற பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறது. 


இதன் காரணமாக குறிப்பாக சீனாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததும் அவர்களுடைய பல்வேறு ரகசியங்கள் திருட்டு போவதும் அதிகரித்து வருகிறதாம். இதன் காரணமாக சீனாவில் இருந்து சுமார் பல்வேறு ஊழியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். இதில் சுமார் 150 சீன பொறியாளர்களை நிறுவனம் பணியமர்த்துவதாக அமெரிக்கா ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறை 2022 இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்க நிறுவனம், அதன் பணியாளர்கள் மற்றும் அதன் தொழில்நுட்ப காப்புரிமைகள் மற்றும் IPR இன் நீண்டகால நலனுக்காக, மைக்ரானின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இது தெரிகிறது.


சீனாவின் செமிகண்டக்டர் துறையில் நீண்டகால முதலீட்டாளரும் தொழிலதிபருமான சென் ராங் ஒரு பேட்டியில் கூறுகையில், "மைக்ரானின் ஷாங்காய் குழு அதன் 300 ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கை இழந்துள்ளது. ஏனெனில் சீனாவில் உள்ள மற்ற சிப் வடிவமைப்பு நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பை இழப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை" என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு, இந்தியாவும் ரூ.76,000 கோடி PLI திட்டத்தை அறிவித்தது. இது உலகளாவிய சிப் உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கவும், அவர்களின் யூனிட்களை இந்தியாவிற்கு மாற்றுவதற்கு அவர்களுக்கு ஆதரவாகவும் இருந்தது. இந்தத் திட்டம் உள்ளூர் சிப் உற்பத்தியை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அடுத்த ஆறு ஆண்டுகளில் இறக்குமதி கட்டணங்களைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை மிகவும் லாபகரமானது TSMC , Samsung, Micron போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள சிப் மற்றும் குறைக்கடத்தி உற்பத்தியாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:  TFI globalnews

Tags:    

Similar News