கொரோனா நோயாளிகளுக்கு நன்கொடை வழங்கிய 'வல்லினச் சிறகுகள்' மின்னிதழ் பெண் கவிஞர்கள் !
இலக்கியத்தில் மட்டுமல்ல, சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்கும் பெண் கவிஞர்கள்.
2020 ஆம் ஆண்டு பெண்களுடைய படைப்பாற்றலையும் அவற்றை வெளிக் கொணரும் விதமாகவும் தொடங்கப்பட்டது தான் வல்லின சிறகுகள் என்னும் மின்னிதழ். இவற்றை உலகப் பெண் கவிஞர் பேரவை, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில், புதுச்சேரி ஒருதுளி கவிதையில் முனைவர் அகன் என்பவரால் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்படும் 'வல்லினச் சிறகுகள்' என்ற மாதாந்திர மின்னிதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த மின்னிதழ் குறிப்பாக சமுதாயத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகளுக்கும் பேரழிவுகளுக்கும் துணை நிற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாகத்தான் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்காக முனைவர். அகன் அவர்களின் வழிகாட்டுதலில் படி இந்தியா, அமெரிக்கா போன்ற உள்ளிட்ட பல நாடுகளின் பெண் கவிஞர்கள் இணைந்து இதற்கான நிதி பணத்தை திரட்டினார்கள். இவர்கள் திரட்டிய நிதி பணம் புதுச்சேரி முதலமைச்சரின் மூலமாக ரூபாய் 50 ஆயிரத்திற்கும் காசோலை வள்ளலார் சபைக்கும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வல்லினச் சிறகுகள் சார்பில் புதுச்சேரியின் முனைவர் பிரின்ஸ், இணைப் பேராசிரியர், அன்னை தெரசா கல்லூரி செய்திருந்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு லட்சத்திற்கான நன்கொடையை வழங்கி கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒப்படைக்கப்பட்டது. இந்த நிதியுதவியின் மூலம் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து உதவ வேண்டி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியின் முனைவர் பிரின்ஸ், முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி, வி. இளவரசி சங்கர், ஜிப்மர், பரீதா, தன்னார்வலச் சட்ட ஆலோசகர் ஆகியோர் மற்றும் கடலூர் அரிமா சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதைப்பற்றி கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் பெண்கள் இலக்கியத்தில் மட்டுமல்ல அது சமூக அக்கறையான செயல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாராட்டி பேசினார்.