கனடா சென்று காணாமல் போன நான்கு விவசாய பின்னணி கொண்ட நபர்கள்!

கனடாவிறகு செல்வதாக கூறி தற்பொழுது காணாமல் போன விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-26 14:07 GMT

குஜராத் மாநிலத்தில் தலைநகர் காந்திநகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள கலோல் தாலுகாவில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் படேல் உள்ள குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை காணவில்லை என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தான் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு செல்வதாக கூறி உள்ளார்கள். ஆனால் அவர்கள் கனடாவிற்கு சென்றதாக எந்த ஒரு விவரமும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்க மற்றும் கனடாவிற்கு இடையில் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.  


மேலும் அவர்கள் விவசாயத்தைக் நம்பி வாழும் குடும்பம் என்றும் தெரிய வருகிறது. டிங்குச்சா கிராமத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு, செவ்வாய்கிழமை நிலவரப்படி அவர்களது நான்கு உறவினர்கள் எங்கிருக்கிறார்கள்? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. எவ்வாறாயினும், மானிடோபா மாகாணத்தில் இருந்து கனடா அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 4 உடல்களின் விவரம் அவர்களின் சுயவிவரங்களுடன் பொருந்துவதாகக் கூறப்படுகிறது. 39 வயது நபர், அவரது மனைவி, மகள் மற்றும் மகன். கனேடிய அதிகாரிகள் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்ட ஜனவரி 18 தேதி கொடுத்துள்ளார்கள்.  


மேலும் கிராமத்தில் உள்ள அந்த குடும்பத்தை நோக்கி தற்பொழுது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அதற்கு முன்பு அந்த குடும்பத்தை சேர்ந்த நபர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வருகிறது. இதற்காக நான்கு நபர்கள் வெளிநாட்டிற்குச் சென்றார்கள்? பிறகு ஏன் அங்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்று பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இது பற்றி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Input & Image courtesy: News


Tags:    

Similar News