உக்ரைன்- ரஷ்யா போர்: ஜெர்மனி உக்ரைனுக்கு பயனற்ற ஆயுதங்களை வழங்கியதா?

ஜெர்மனி உக்ரைனுக்கு ஆயுதமாக வெறும் பயன்படாத வெடி மருந்துகள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு.

Update: 2022-03-07 13:42 GMT

ரஷ்யா தற்போது உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனவே உக்ரைன் நாட்டுக்கு பக்க விளைவாக பல்வேறு நாடுகளும் அத்தகைய நாட்டிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான தனது போராட்டத்திற்கு ஆதரவாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை உக்ரைன் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கேட்டு வருகிறது. நடந்து வரும் சண்டைக்கு மத்தியில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு பல ஆயுதங்களை அனுப்புகிறது. உக்ரைன் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை அனுப்ப பல நாடுகளும் இணைந்துள்ளன.



ஜெர்மனி ஒரு ஐரோப்பிய நாடாகும், அது உக்ரைனுக்கு ஆதரவாக உரத்த குரலில் அறிவித்தது. அது உக்ரைனுக்கு ஆயுதங்களை நேரடியாகவும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப் பொருட்கள் மூலமாகவும் அனுப்புகிறது. ஆனால், சமீபத்தில் ஜெர்மனி தங்களுக்கு வழங்கிய ஸ்ட்ரெலா ஏவுகணைகளின் பெரும்பகுதி இனி பயன்படுத்த முடியாதது என்பதை உக்ரேனிய இராணுவம் கண்டுபிடித்தது. மேலும், அந்த ஆயுதங்களில் பல சோவியத் கால ஏவுகணைகள் ஆகும். அவை 2014 இல் இருந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு சென்றதாகவும் உக்ரைன் நாடு குற்றம்சாட்டி உள்ளது. 


உக்ரேனியப் படைகளுக்கு சுமார் 2,700 ஸ்ட்ரெலா ஏவுகணைகளை வழங்கியதாக பெர்லின் இந்த வாரம் அறிவித்தது. ஆனால், அவற்றில் 700 ஏவுகணைகள் செயலிழக்கும் அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்புவது குறித்த அரசாங்க அறிவிப்பால் பெர்லினில் வசிக்கும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு உதவுவதில் ஜெர்மனியின் நோக்கங்கள் குறித்தும் இது சந்தேகத்தை எழுப்புகிறது. ஸ்கிராப் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதன் மூலம் ஜெர்மனி நாட்டிடம் ஆயுதங்கள் இல்லை என்பது பொருள் ஆகுமா? அல்லது பயனற்ற ஆயுதங்களை அனுப்புவதன் மூலம் நற்பெயரை உருவாக்க முயற்சிக்கிறதா? என்று தெரியவில்லை. 

Input & Image courtesy:TFI Globalnews

Tags:    

Similar News