இந்தியா வரும்பொழுது சுங்கவரி இல்லாமல் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?

வெளிநாட்டிலிருந்து இந்தியா சென்று வரும் பொழுது சுங்க வரி செலுத்துவதற்கு நிபந்தனையாக எவ்வளவு கிராம் வரை தங்கம் எடுத்து வரலாம்?

Update: 2022-02-13 14:09 GMT

வெளிநாடுகளில் பெரும்பாலும் வேலை பார்க்கும் மக்கள், தங்களுடைய சொந்த நாடான இந்தியாவிற்கு திரும்பும்பொழுது பெருமளவில் அங்குள்ள தங்கத்தை எடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய மக்கள் காலம் காலமாக தங்கள் வேலை பார்க்கும் போது அங்குள்ள தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இந்தியா திரும்பும் பொழுது அவர்கள் அவற்றை தன்னுடைய குடும்பத்திற்காக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தியா திரும்பும் பொழுது நீங்கள் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? இவ்வளவுக்கும் மேலதிகமாக கொண்டுவந்த சுங்கவரி செலுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 


குறிப்பாக ஒருவர் சுமார் குறைந்தபட்சம் ஒரு வருட காலமாவது அவர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு கீழ் வேலை செய்து, இந்தியா திரும்பும் நபர்கள் தங்க நகைகள் எடுத்து வந்தால் அவர்கள் கட்டாயம் சுங்கவரி செலுத்த வேண்டும். எனவே முதலில் நீங்கள் ஒரு வருட காலமாக அங்கு தங்கி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் பிறகு தான் நீங்கள் சுங்க வரியில் இருந்து விலக்கு பெற முடியும். குறிப்பாக நீங்கள் எடுத்து வரும் தங்கத்தின் அளவு ஆணாக இருந்தால் 50 ஆயிரம் வரையிலான தங்கத்தை எடுத்து வரையிலும், பெண்ணாக இருந்தால் ஒரு லட்சம் வரையிலான தங்கத்தை எடுத்து வரலாம். இதற்கு வரி கட்ட தேவையில்லை. 


மேலும் நீங்கள் இந்த மதிப்பை விட அதிகமாக மதிப்புள்ள தங்கத்தை எடுத்து வரும் போது சுங்கவரி செலுத்த வேண்டும். அந்த அதிகமாக மதிப்பிற்கும் குறிப்பிட்ட சதவீத சுங்க வரியை அதிகாரிகளிடம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு இந்திய பயணி ஒருவர் ஒரு கிலோ வரை தங்கப் எடுத்து வந்தால் அவர்கள் இன்றைய மதிப்பின்படி 36.50 சதவீதம் வரை சுங்க இலாகா கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Khaleejtamil

Tags:    

Similar News