இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி: கடந்த ஆண்டை விட 33% அதிகம்!

இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 33 சதவீத அதிகரிப்பு.

Update: 2022-08-07 05:21 GMT

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு 2022-23 நிதியாண்டின் (ஏப்ரல்-ஜூன்) முதல் மூன்று மாதங்களில், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் மூன்று மாதங்களில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 31 சதவீதம் அதிகரித்து $ 7408 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 


வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் 2022 இல் 7408 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் இது 5663 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல்-ஜூன் 2022-23க்கான ஏற்றுமதி இலக்கு 5890 மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எடுத்த முயற்சிகள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த ஏற்றுமதி இலக்கில் 31 சதவீதத்தை எட்டுவதற்கு உதவியுள்ளன.


வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரகதின் தரவுகளின்படி, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி நான்கு சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே சமயம் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் தொடர்புடைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 59.71 சதவீதம் என்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மேலும், தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 37.66 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Input & Image courtesy: PIB News

Tags:    

Similar News