ஆப்கானில் மீதமுள்ள இந்தியர்களை மீட்கும் பணி: தீவிரமாக ஈடுபடும் இந்திய விமானப்படை !

ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள இந்தியர்களை மீட்ப்பதற்காக இந்திய விமானப்படை தீவிரமாக களமிறங்கியுள்ளது.

Update: 2021-08-21 13:24 GMT

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. 


இந்தியா திரும்புவது மற்றும் இதர உதவிகளுக்காக அந்த சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் கூடுதலாக தொலைபேசி எண்களையும், வாட்ஸ்அப் எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, காபூல் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சுமார் 200 இந்தியர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களையும் மீட்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. 


தற்போது இந்திய விமானப்படையின் C-130J விமானம் 85 க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் காபூலில் இருந்து புறப்பட்டது. அவர்கள் தற்பொழுது மீட்க பட்டுள்ளார்கள். காபூலில் உள்ள இந்திய மக்களை வெளியேற்ற இந்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப் படையின் ஆதரவு முழுமையாக கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Input:https://m.economictimes.com/news/defence/indian-air-forces-c-130j-takes-off-from-kabul-with-over-85-indians/articleshow/85509243.cms

Image courtesy:economic times 


Tags:    

Similar News