இந்திய-அமெரிக்க உறவை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்திய தூதரகம் நிகழ்ச்சி !
இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்திய தூதரக நிகழ்ச்சி.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை சில அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துரையாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியில், பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட ஜனநாயகங்கள், அறிவு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஒருங்கிணைந்தவை என்று கூறினார். 'இந்தியா மற்றும் அமெரிக்க உறவுகளின் அடிப்படையில் கல்வி மற்றும் தொழில்நுட்ப தூண்களை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பின் கீழ் சுமார் 10 அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தலைவர்களுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் உரையாற்றினார்.
"பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட ஜனநாயகங்கள், அறிவு, தகவல் மற்றும் யோசனைகளின் வெளிப்படையான பரிமாற்றம் இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு ஒருங்கிணைந்ததாகும். தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதுமை கூட்டாண்மை ஆகியவை எங்கள் உறவின் அடிப்படை தூண்களாக உள்ளன" என்று அவர் கூறினார். தற்போது, பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 பேர் உயர்ந்த பதவியில் உள்ளனர்.
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான கல்வி மற்றும் அறிவைப் பகிர்தலில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஆர்வம் கொண்டு, இந்தியா-அமெரிக்க உறவுகளின் எதிர்காலம் இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு நெருக்கமாக இணைந்திருப்பார்கள் என்பதைப் பொறுத்தது என்றார். இனிமேலும் அமெரிக்க இந்திய உறவு குறித்து முன்னேற்றம் ஏற்படும் அவர் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
Image courtesy: Times of India