மெக்சிகோவில் விவேகானந்தர் சிலை: மக்களவை சபாநாயகர் திறப்பு!
மெக்சிகோவில் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
மெக்சிகோவில் தற்போது முதன் முறையாக விவேகானந்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மெக்சிகோவில் விவேகானந்தர் சிலையை திறந்து வைப்பதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தெரிவித்துள்ளார். இலத்தின் அமெரிக்காவில் தான் மெக்சிகோ நகரம் அமைந்துள்ளது. மெக்சிகோ நகரில் இதுவரை விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டது கிடையாது. இதுதான் முதல் முறையாக அங்கு திறக்கப்படும் முதல் சிலையாகும்.
குறிப்பாக இந்திய தலைவரின் சிலையை திறந்து வைப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவை சுதந்திர நாடு என்று ஏற்றுக்கொண்ட முதல் நாடாக மெக்ஸிகோ இருந்தது என்பதையும் சபாநாயகர் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில திறந்து வைத்து பேசிய அவர் விவேகானந்தரின் கருத்துக்கள் ஒட்டுமொத்த மனித குலத்திற்குமான என்று அவர் கூறினார்.
மேலும் மெக்சிகோ மற்றும் இந்தியா உடனான வர்த்தக உறவு இதுபோன்று பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் கலாச்சாரம் அடிப்படை போன்ற கருத்தில் கொண்டு இந்தியாவை மெக்சிகோ முக்கிய இடத்தில் வைத்திருப்பதாகவும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: Polimer News