இந்தியா: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முதல் முறை அனுமதி !
இந்தியாவிற்குள் தற்போது முதல்முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான வருவாய் சுற்றுலாத் துறையின் மூலம் பெறப்படுகிறது. அதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை பெருமளவில் இழப்பை சந்தித்தது. சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா மார்ச் 31, 2022 வரை வழங்கப்படும் அல்லது ஐந்து லட்சம் விசா வழங்கப்படும் இதற்கான மொத்த நிதி ரூ. 100 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலவச விசா நடவடிக்கை இந்தியாவுக்கு வரும் குறுகிய கால சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வெளிநாடுகளில் குடியுரிமை வாங்கி இந்தியாவிற்கு வர முடியாமல் இதுநாள்வரை தவிர்த்த இந்திய வம்சாவளிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக சில கட்டுப்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதாவது அவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. கோவிட் 19 அதிகமாக இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே அத்தகைய நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அனுமதிக்கப்படுமா? என்பதை சுற்றுலாத்துறை இன்னும் ஆலோசித்து வருவதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐரோப்பாவில் உள்ள வேறு நாடுகளில் ஏற்கனவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.
Input & Image courtesy:economictimes