இந்திய வம்சாவளியின் பிரபலமான 'விஸ்கி எக்ஸ்சேஞ்ச்' நிறுவனம் விற்பனை !
லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சகோதரர்கள் தன்னுடைய சொந்த வணிகத்தை பிரெஞ்ச் நிறுவனத்திற்கு விற்கிறார்கள்.
லண்டனை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் சகோதரர்கள் சுகிந்தர் மற்றும் ராஜ்பீர் சிங் ஆகியோர் தங்கள் சில்லறை வணிகத்தை பிரெஞ்சு பானங்களின் முக்கிய நிறுவனமான பெர்னோட் ரிக்கார்டுக்கு விற்க ஒப்புக்கொண்டனர். இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இவருடைய 'விஸ்கி எக்ஸ்சேஞ்ச்' தற்போது விற்பனைக்கு வருகிறது. 1999 ஆம் ஆண்டில் அவர்களால் நிறுவப்பட்ட விஸ்கி எக்ஸ்சேஞ்ச், இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆன்லைன் ஸ்பிரிட்ஸ் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாகும். இது விஸ்கி மற்றும் ஆல்கஹாலில் நிபுணத்துவம் பெற்றது. குறிப்பாக மேற்கத்திய நாட்டு மக்களைப் பொறுத்தவரையில், விஸ்கி மிகப் பிரபலமான ஒன்று.
இவர்களிடையே இந்த நிறுவனம் லண்டனில் உள்ள முக்கிய பகுதியில் அமைந்துள்ள காரணத்தினால் தினமும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. ஒரு நாளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் பட்டியல் உள்ளது. குடும்ப வணிகத்தில் லண்டனின் இருக்கும் கோவென்ட் கார்டன், கிரேட் போர்ட்லேண்ட் ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் பிரிட்ஜ் ஆகிய மூன்று இடங்களிலும் இவர்களுடைய கடைகள் உள்ளன. விஸ்கி எக்ஸ்சேஞ்ச் கட்டிய 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெர்னோட் ரிக்கார்ட் குடும்பத்துடன் சேர்ந்து வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இந்த இரு சகோதரர்களின் முயற்சி அதிகமாக உள்ளது.
இதில் இந்த நிறுவனத்தின் விற்பனை பற்றி சகோதரர் கூறுகையில், "விஸ்கி எக்ஸ்சேஞ்ச் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரு குடும்பம் போல் உணர்கிறார்கள். எங்கள் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்படியாக ஒரு கூட்டாளிகளின் நெறிமுறையைப் பராமரிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். உலகெங்கிலும் உள்ள சிறந்த தயாரிப்பாளர்களிடமிருந்து மிகச்சிறந்த விஸ்கி தொழிலில் ஈடுபடுதல் மற்றும் இங்கிலாந்தில் உள்ள முன்னணி நிறுவனங்களில் நாங்களும் உள்ளம் என்பது எங்களின் மகிழ்ச்சிக்குரியதாக்குகிறது" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy:Times of India