ஜப்பான் வரை தமிழகத்தின் பாரம்பர்யத்தை எடுத்துச்சென்ற பிரதமர் மோடி - சுவாரஸ்ய தகவல்

தமிழகத்தில் சிறப்பு பெற்ற கோரைப் பாயை ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு பரிசாக வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

Update: 2022-05-26 00:19 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாட் அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மீண்டும் ஜப்பான் முன்னாள் பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோரைப் பாயை பரிசாக வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை பட்டுப் பாயை ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு, பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். குவாட் அமைப்பு என்பது அமெரிக்கா இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும். சீனாவின் ஆதிக்கத்தை பசிபிக் பகுதிகளில் கட்டுப்படுத்துவதற்காக 4 பிராந்தியத்தின நாடுகள் கூட்டாக ஏற்படுத்திய அமைப்புதான் இது. 


எனவே சமீபத்தில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு தமிழ்நாட்டின் சிறப்பான கோரைப் பாயை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளீடான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் ஆஸ்திரேலியா பிரதமர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையின் பிரபலமான பட்டுப் பாயை பரிசாக வழங்கியுள்ளார்.


குறிப்பாக இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ்நாட்டு மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வளர்க்கப்படும் ஒரு வகை கோரைப் புல்லில் இருந்து இது செய்யப்படுகிறது. மேலும் அந்த பகுதிகளில் இந்த பாய் தொழில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. பத்தமடை பாய்கள் மிகவும் மிருதுவானது. மேலும் இது துணி போன்ற உணர்வைக் கொடுப்பதால் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுப்பது ஆகும் கூறப்படுகிறது மேலும் இதனை நெய்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்கள் தேவைப் படுகிறதாம். 

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News