இலங்கைக்கு மேலும் 1530 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கிய இந்தியா! - கண்ணீர்மல்க கைகூப்பி நிற்கும் இலங்கை அரசு

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா மேலும் 1,530 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது.

Update: 2022-05-03 06:15 GMT

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா மேலும் 1,530 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது.


இலங்கையின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், மற்றும் குடும்ப அரசியலால் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கை அன்னிய செலாவணி கையிருப்பு குறைவாக உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் அண்டை நாடு மற்றும் மனிதாபிமான முறையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா வழங்கிய 200 மில்லியன் டாலர் கடன் உதவியை கொண்டு இந்த மாதத்திற்கு நான்கு தவணையாக எரிபொருள் வாங்க உள்ளதாக இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனா விஜெயசேகர தெரிவித்தார். இது போக கூடுதலாக 3,500 கோடி ரூபாய் கடன் உதவி கேட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மத்திய அரசு சார்பில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கையில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் மக்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை? எது அவர்களின் முதல் தேவையாக இருக்கும் என்பதை உணர்ந்து அங்கிருந்து அவர் மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer News

Similar News