அமெரிக்காவில் முக்கிய பொறுப்பை நிர்வகிக்க உள்ள இந்திய வம்சாவளி !
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் அவர்களின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்க்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் இல் இருந்து தற்போது வரை பல்வேறு இந்தியர்களை உயர் பதவிக்கு நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது, வெள்ளை மாளிகையின் அதிகாரம் மிகுந்த பணிகளின் ஒன்றான அமெரிக்க அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌதம் ராகவனை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்தியர்களுக்கு சாதகமான பல்வேறு முடிவுகளை மேற்கொண்டு வருகிறார் அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியர்களுக்குப் மிகவும் உதவிகரமாக இருக்கும் எச்1பி விசா பிரிந்து செய்து முடிவை கட்டுப்பாடுகள் இன்றி தளர்த்தி உள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியரான கவுதம் ராகவனை அமெரிக்க அமெரிக்க அதிபருக்கான அதிகாரங்கள் அலுவலக தலைவராக நியமித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் வளர்ந்த கவுதம் ராகவனின் தாய் தந்தையை இந்திவியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கவுதம் ராகவன் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் அதிகாரமிக்க பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்ததக்கது.
Input & Image courtesy:Business standard