போர் இருந்தாலும் உக்ரைனில் இருக்க முடிவெடுத்த இந்திய ராணுவ வீரரின் மகள்: காரணம் என்ன?
உக்ரேனில் தனக்கு அடைக்கலம் கொடுத்த உரிமையாளரின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டி, அங்கே இருக்க முடிவு எடுத்த இந்திய மாணவி.
இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான மருத்துவம் பயிலும் மாணவியின் பெயர் நேஹா. இவர் உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்து இருக்கிறார். ஆனால் அவர் அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் சேரும் பொழுது விடுதியில் தங்க அவருக்கு இடம் கிடைக்கவில்லை. நேஹா முதன்முதலில் உக்ரைனுக்கு வந்தபோது, தங்கும் விடுதியில் அதிகம் செலவு செய்து இருக்க முடியாது என்ற காரணத்தினால், கியேவில் உள்ள ஒரு கட்டுமானப் பொறியாளரின் வீட்டில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தார்.
அதன் பின்னர் அந்த உரிமையாளரின் குடும்பத்தில் ஒரு நபராக இவர் மாறயுள்ளார். கடந்த இரு வருடங்களாக இவர் அங்கு வாடகை வீட்டில் இருந்து கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய ஒரு சூழ்நிலையில் தற்போது நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் அவருக்கு இது பற்றிய தகவல்கள் வந்துள்ளன. அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், மேலும் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறும்படி தூதரக தகவலும் வந்துள்ளதாம். ஆனால் அதற்குள் தற்போது ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இருந்தாலும் நேஹா தன்னுடைய வீட்டின் உரிமையாளர் தற்பொழுது ராணுவத்தில் சேர்ந்துள்ளார். அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் தற்போது தனியாக உள்ளார்கள். அவர்களை விட்டு தற்பொழுது நான் பிரிந்து வர முடியாது. எனவே அவர்களுடன் நானும் இங்கே இருப்பேன் என்று முடிவை அவர் எடுத்துள்ளார். கடுமையான போரின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதிலும், நேஹா வீட்டின் உரிமையாளரின் மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகளுடன் கிய்வில் உள்ள ஒரு பதுங்கு குழியில் தங்கிவிட முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "நான் வாழலாம் அல்லது வாழாமலும் இருக்கலாம், ஆனால் இந்த சூழ்நிலையில் இந்த குழந்தைகளையும் அவர்களின் தாயையும் நான் கைவிட மாட்டேன்" என்று ஹரியானாவின் சார்க்கி தாத்ரியில் வசிக்கும் தனது தாயாரிடம் நேஹா கூறினார். நேஹா சில ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரரான தனது தந்தையை இழந்தார். நேஹாவின் இந்த ஒரு முடிவால் இவருடைய தந்தை இவரை நினைத்து மிகவும் பெருமைப்படுவார் என்று சொல்லத் தேவையில்லை.
Input & Image courtesy: NRI Affairs