பாதுகாப்பு துறையின் முக்கிய பதவி - இந்திய வம்சாவளியை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கும் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெயரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்.

Update: 2022-06-18 01:05 GMT

அமெரிக்க பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் பென்டகனில் பதவிகளுக்கு இந்திய வம்சாவளி பெண் பெயரையும் சேர்த்து மொத்தமாக 5 பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்துள்ளார். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு துறையில் நீண்டகாலம் தன்னுடைய அனுபவத்தை நிலைநிறுத்திக் கொண்ட இந்திய வம்சாவளியான ராதா ஐயங்காரை தற்போது உயர் பதவிக்கு அமெரிக்க அதிபர் பரிந்துரைத்து தகவல் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. 


ராதா அய்யங்கார் கூகுள் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேஸ்புக்கில் கொள்கை பகுப்பாய்வின் உலகளாவிய தலைமைப் பண்பை வகித்தவர் இவர். மேலும் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் உதவிப் பேராசிரியராக இருந்தார் என்பதும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பிரிட்டன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். 


மேலும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான பிரச்சினைகளில் போது முக்கிய பதவிகளில் இவர் இடம் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியான ராதா ஐயங்கார் பெயரை தற்போது அவர்கள் ஜோ பைடன் அவர்கள் பாதுகாப்பு துறையின் முக்கிய பதவிக்கு பரிந்துரைத்து இருக்கிறார். இவர் பாதுகாப்பு மட்டுமின்றி எச்சத்தை துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

Input & Image courtesy: Junior Vikatan

Tags:    

Similar News