கனடாவில் இந்திய மாணவர்கள் நடத்தும் போராட்டம்: பின்னணி என்ன?

கனடாவில் 3 கல்லூரிகள் மூடப்பட்டு அதை தொடர்ந்து இந்திய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

Update: 2022-02-07 13:55 GMT

பல்வேறு இந்திய மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்காக வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். குறிப்பாக அவர்கள் தங்களுடைய வெளிநாடுகளில் சென்று படிப்பதன் மூலமாக தங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இதன் காரணமாக வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உலக அளவில் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்திய மாணவர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக சர்வே முடிவு கூறுகிறது. அந்த வகையில் தற்போது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இதற்குப் பின்னணியில் கனடாவில் இருக்கும் மூன்று கல்லூரிகள் மூடப்பட்டு தொடர்ந்து அவர்கள் எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. மேலும் அவர்கள் அந்த கல்லூரிகளில் தங்களுக்கான கட்டணத்தை செலுத்திய பிறகும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் கொட்டும் பனியிலும் பதாகைகளை ஏந்திக் கொண்டு, போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றும், அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் தற்போது ஆதரவை தெரிவித்து உள்ளார்கள். 


கனடாவின் மாண்ட்ரீல் நகரில் உள்ள டி காம்ப்டாபிலிட் மற்றும் டி செக்ரடேரியட் டு கியூபெக் கல்லூரி (CCSQ), டி ஐ'எஸ்ட்ரி கலோரி (CDE) மற்றும் எம் கல்லூரி ஆகிய மூன்று தனியார் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு படிக்கும் சுமார் 2000 மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய தூதரகம் அங்கு உள்ள கல்லூரியில் இதற்கான விளக்கத்தையும் கேட்டு பேச்சுவார்த்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:  News

Tags:    

Similar News