மாலத்தீவு யோகா கொண்டாட்டத்தில் கலவரம்: தாக்கப்பட்ட இந்தியர்கள்!

இந்திய தூதரகம் சார்பில் மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தை கலவரக்காரர்கள் உட்புகுந்து இந்தியர்களை தாக்கினார்.

Update: 2022-06-22 00:28 GMT

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் மாலத்தீவில் தற்போது பயங்கரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காலை மாலத்தீவ தேசிய கால்பந்து மைதானத்தில் இந்திய தூதரகம் மற்றும் யோக மையம் இளைஞர் அமைப்பினர் சேர்ந்து இந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தார்கள். விழாவின் தொடக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது மற்றும் அனைவரும் யோகா செய்யத் தொடங்கிய கொண்டிருப்பதுதான் சம்பவம் அரங்கேறியது. 


அப்போது, யோகா தின கொண்டாட்டத்தின் போது சிலர் மைதானத்தில் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நபிகள் நாயகம் குறித்து இந்தியாவில் பாஜக முன்னாள் அதிகாரி தெரிவித்த சர்ச்சையின் காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக இந்த இரு சம்பவங்கள் நடைபெற்று இருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் இதனை தொடர்ந்து அங்கு உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு சூழ்நிலையில் ஏற்படுத்தி தர மாலத்தீவு வாழ் இந்தியர்கள் சார்பில் கோரிக்கை வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் மீது தாக்குதல் ஏற்பட்டு இருப்பது அனைத்து தரப்பில் இருந்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News