இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க வேண்டும்: அமெரிக்கா M.Pக்கள் கடிதம் !
இந்திய மாணவர்களுக்கு உடனே விசாக்கள் வழங்கக்கோரி அமெரிக்கா M.P.க்கள் வலியுறுத்தல்.
வெளிநாடுகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பட்டப் படிப்புகளை படிக்க இந்திய மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் ஏராளமான மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். தற்போது அமெரிக்காவில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக விசா நடைமுறையில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் lH1P விசாவுக்கு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் விசாக்களுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்திய மாணவர்கள் உள்பட பல நாட்டு மாணவர்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது விசா கட்டுப்பாடுகளை அதிபர் ஜோபைடனின் நிர்வாகம் தளர்த்தி வருகிறது. இருந்தாலும், அடுத்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்களில் சேர விசாவுக்கு விண்ணப்பிப்பதில் முழுமையான செயல்பாடு நடை முறைக்கு இன்னும் வரவில்லை.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அவசர விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை விரைவுப்படுத்த வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தை அமெரிக்க M.P.க்கள் வலியுறுத்தி உள்ளனர். சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை உடனே துரிதப்படுத்த வேண்டும். மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் படிப்பை தொடங்க விசாக்கள் சரியான நேரத்தில் கிடைக்குமா? என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.