தமிழரின் ஹைக்கூ கவிதைகள் முதல் முறையாக ஜப்பான் மொழியில் மொழிபெயர்ப்பு !

தமிழரின் ஹைக்கூ கவிதைகள் ஜப்பான் மொழியில் மொழிபெயர்ப்பு.

Update: 2021-08-14 14:15 GMT

ஜப்பானிய மொழியில் மிகவும் பிரபலமான இருந்த ஹைக்கூ கவிதைகள் தமிழ் மொழிக்குக் கொண்டு வந்தவர் மகாகவி பாரதியார் தான் இவர் தன்னுடைய கட்டுரையின் மூலமாக இவற்றை அறிமுகம் செய்தார். அப்பொழுதிலிருந்து தமிழில் ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைத் தளத்தில் 37 ஆண்டுகாலமாகத் தீவிரமாக இயங்கி வருபவர் மு.முருகேஷ் அவர்கள். இவர் இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஹைக்கூ கவிதை நூல் ஒவ்வொன்றும் புதுமையான வடிவத்தில் வெளியாகின.


2008-ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடைபெற்ற பன்னாட்டு ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்ற உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில், தமிழில் ஹைக்கூ கவிதை எழுதும் கவிஞர்கள் சார்பில் பங்கேற்றார். அதில் நடைபெற்ற ஹைக்கூ கவிதைப் போட்டியில் இவர் எழுதிய ஹைக்கூ ஒன்றும் பரிசினைப் பெற்று, உலக மொழிகளிலெல்லாம் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஜப்பானிய மண்ணில் உருவாகி, இன்றைக்கு உலகின் திசையெல்லாம் வலம் வருகின்றன ஹைக்கூ கவிதைகள். அந்த வகையில் தற்போது தமிழில் மு.முருகேஷ் எழுதிய 10 ஹைக்கூ கவிதைகள், தற்போது ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அகிதா இண்டர்நேஷனல் ஹைக்கூ நெட்வொர்க்கில் வெளியாகியுள்ளது.


இதன் நிறுவனர் ஜப்பானைச் சேர்ந்த கவிஞர் ஹிடெனோரி ஹிருடா. இவர் குறிப்பாக உலக மொழிகளில் எழுதப்படும் சிறந்த ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலம் வழி படித்து, அதனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து, 'வோல்டு ஹைக்கூ சீரியஸ்' எனும் தொடராக வெளியிட்டு வருகிறார். அதில், 73-ஆவது கவிஞராக மு.முருகேஷின் கவிதைகளைத் தேர்வுசெய்து ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.  அப்படி மொழியாக்கம் செய்யப்பட்ட முருகேஷ் அவர்களின் ஹைக்கூ கவிதைகள் சில, 

1.    துருப்பிடித்த ஆணி

      காற்றிலாடும் அம்மாவின் படம்

      மிச்சமிருக்கும் ஊதுபத்தி மணம், 

2.   மீன் சந்தையில் கூட்டம்

      கேட்டதுமே குத்துகிறது

      முள்ளாய் விலை, 

3.  அறுந்துபோனது

     குழந்தையோடு சேர்த்து

      அம்மாவின் இடுப்பில் செருப்பு. 

Input: https://naanmedia.in

Image courtesy: Naanmedia 


Tags:    

Similar News