ஆப்கானில் இருந்து இந்தியர்களின் விமான பயணம்: இந்தியா தான் சொர்க்கம் என்று கூறும் NRI-கள் !
ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களின் மறக்க முடியாத அனுபவங்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 200 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். ஆப்கன் முழுதும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இந்திய தூதரக ஊழியர்கள் உட்பட 200 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். காபூலில் இருந்து தப்பித்து வருவதற்குள் இவர்கள் வேதனையை அனுபவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அங்கிருந்து வந்து NRIகள் கூறுகையில், "தலிபான்கள் காபூலை நெருங்கி வருவது தெரிந்ததும் அங்கிருந்து தப்பித்து நாடு திரும்புவதற்கு குடும்பத்துடன் தயாரானோம். காபூலில் வெளிநாட்டு துாதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள நம் நாட்டின் துாதரகத்தில், பணிபுரியும் இந்திய தூதரக ஊழியர்கள் உட்பட 200 பேர் குவிந்தனர். காபூலை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன், 50க்கும் மேற்பட்டோர் விமானப் படை விமானம் வாயிலாக நாடு திரும்பினர்.
மீதமுள்ளவர்களை அழைத்துச் செல்வதற்காக விமானப் படை விமானம், காபூல் விமான நிலையத்தில் தயாராக இருந்தது. ஆனால், அங்கு செல்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. இதற்கிடையே, தலிபான் அமைப்பினருடன் துாதரக அதிகாரிகள் பேசினர். மத்திய அரசும் பல வகைகளில் முயற்சி எடுத்தது. இதையடுத்து இரவுக்கு பின்பே அங்கிருந்து வெளியேற தலிபான்கள் எங்களை அனுமதித்தனர். மேலும், விமான நிலையம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நம் விமானப் படை விமானம் தயாராக இருந்தும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மூன்று மணி நேரம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இறுதியாக இந்தியா தான் சொர்க்கம் என்பதை தற்போது உணர்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
Image courtesy: economictimes