கேரளா குருவாயூர் கோயிலுக்கு மரகதக் கிரீடத்தை வழங்கிய NRI தொழிலதிபர் !
கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு மரகத கற்கள் பதித்த கிரீடத்தை NRI தொழிலதிபர் வழங்கிய உள்ளார்.;
இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் செல்லும் இந்தியர்கள் பெரும்பாலோனோர் ஒரு நல்ல நிலைக்கு குறிப்பாக கைநிறைய சம்பாதிக்கும் ஒரு நிலைக்கு வருகிறார்கள். அப்படி இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றுள்ள NRIகள் பல பேர் தங்களுடைய நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு மனநிலைக்கு வருகிறார்கள். குறிப்பாக கோயில்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக தற்போது உள்ள நோய் தொற்று காலங்களில் தங்களால் முடிந்த உதவிகளையும் அவர்கள் செய்து வந்துள்ளார்கள்.
அந்த வகையில் தற்பொழுது கேரளாவைச் சேர்ந்த ரவி என்பவர் வெளிநாடு சென்று தற்போது ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இவர் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு தற்போது மரகதக் கற்கள் பதித்த கிரீடத்தை சாமி சன்னதிக்கு பரிசாக வழங்கியுள்ளார். மரகத கற்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடம் சுவாமி சன்னதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது தொழிலதிபர் ரவி அவர்களின் குடும்பமும் பங்கேற்றது.
725 கிராம் எடையுள்ள கிரீடத்தின் மீது 14.45 காரட் மரகதம் உள்ளது. பாகுன்னம் ராமன்குட்டி தண்டபாணியால் 'நக்ஷி' பாணியில் வடிவமைக்கப்பட்ட, 7.45 அங்குல உயரமுள்ள கிரீடம் ஐதராபாத்தில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் கடையிலும் ஆடர் குடுத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பாக இந்த முழு கிரீடத்தை வடிவமைக்கும் 40 நாட்கள் ஆகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & image courtesy: TOI