குவைத் வாழ் தமிழர்களுக்கான நற்செய்தியை வெளியிட்ட இந்திய தூதரகம்!
குவைத் நாட்டின் இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்.
குவைத் நாட்டில் இந்திய தூதராக தற்பொழுது இருக்கும் சிபி ஜார்ஜ் அவர்கள் நற்செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகுதான் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தியாவில் தற்போது இரண்டு வகையான தடுப்பூசி மட்டும் தான் பரவலாக போடப்பட்டு வருகிறது. இதில் தான் செல்லும் நாடுகளில் அந்த தடுப்பூசியை அனுமதிக்கப்பட்டால் மட்டும் தான் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதுபோல குவைத் நாட்டில் தற்பொழுது கோவிஷீல்ட் தடுப்பூசி தூதரகம் சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலிருந்து குவைத் நாட்டிற்கு வேலை நிமித்தமாக செல்லும் இந்தியர்களுக்கு இது ஒரு நற்செய்தி என்று கூறலாம். நேற்று நடந்த குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு காணொலி வழியாக நடந்தது. இந்த கருத்தரங்குக்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்தார். உணவு மற்றும் ஆட்டோமொபைல் துறையில் குவைத் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது குவைத் நாட்டிற்கான இந்திய தூதர் கூறுகையில், "இந்தியாவுக்கு வெளியே முதல் மையமாக குவைத்தில் நீட் தேர்வு மையத்தை திறக்க இந்திய அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்க செய்தி. இந்திய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் இந்த வரலாற்று முடிவை எடுத்ததற்காக மாண்புமிகு. இந்திய பிரதமருக்கும், மாண்புமிகு. கல்வி அமைச்சருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
Inputs: https://news.kuwaittimes.net/website/good-news-for-thousands-of-indians-awaiting-return-to-kuwait/
Image courtesy: Kuwait times