NRI கிராமத்தில் நுழைந்த சிறுத்தைப்புலி: 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
NRI கிராமத்தில் நுழைந்த சிறுத்தை புலி 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள NRI காலனியில் வழிதவறி வந்த சிறுத்தைப்புலி ஞாயிற்றுக்கிழமை 15 மணி நேர நீண்ட நடவடிக்கைக்குப் பிறகு ஜகத்புராவில் உள்ள குடியிருப்புப் பகுதி மீட்கப்பட்டது. அருகிலுள்ள ஜலானா வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்த சிறுத்தை, சனிக்கிழமை இரவு குடியிருப்புப் பகுதியில் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து வன அதிகாரிகள் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். உள்ளே நுழைந்தது கிட்டத்தட்ட நான்கு வயது ஆண் சிறுத்தைப் புலி என்று கணிக்கப்பட்டது.
இன்று காலை 6 மணியளவில் R-11 என்ற வீட்டிலிருந்து வெளியேறி காலனி சாலையில் நடந்து செல்வதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு, அது மீண்டும் வீட்டின் புல்வெளியில் அமர்ந்தது. மீட்புக் குழுவினர் விலங்குகளை விரட்ட முயன்றபோது, அது காலனிக்குள் ஓடிச்சென்று R-26 என்ற வீட்டில் தஞ்சமடைந்தது. அதிகாரி ஒருவர் கூறும்போது, "வனக் குழுவின் இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, மூத்த கால்நடை மருத்துவ அதிகாரி அரவிந்த் மாத்தூர் அவர்கள் மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது " எனக் கூறினார். இருப்பினும், அதன் பாதுகாப்பைப் பேணுவதற்கான இடத்தைத் துறை வெளியிடவில்லை சிறுத்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கமாகி விட்டது.
கடந்த டிசம்பர் மாதம் மாளவியா நகர் செக்டார் உள்ள வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது. முன்னதாக, அக்டோபரில், ஜலானாவில் இருந்து சிறுத்தை ஒன்று தப்பி வந்து தஞ்சம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி SMS பள்ளியில் உள்ள ஆடம்பரமான காலனிக்குள் சிறுத்தை புகுந்தது. வனவிலங்கு வல்லுநர்கள் ஒரு சில ஆண் சிறுத்தைகளின் நடமாட்டம் பற்றி அறிந்து கொள்ள ரேடியோ காலரிங் செய்ய பரிந்துரைத்துள்ளனர். இப்பிரச்சினை மனித-விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும் என்பதால், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். "மாநில வனவிலங்கு வாரியக் கூட்டத்தில், மூத்த அதிகாரிகளிடம் இந்தத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது" குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Times of India