நான்கு பெண்களை மணந்த NRI கணவர் மீது வழக்குப் பதிவு செய்த மனைவி.!

நான்கு பெண்களை மணந்த NRI கணவர் மீது வழக்கு பதிவு செய்த மனைவி.

Update: 2021-12-24 13:40 GMT

தனக்கு முன்பு நான்கு பெண்களை மணந்த தன்னுடைய NRI கணவர் மீது லூதியானாவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். தன்னுடைய கணவர் என்னிடம் நடந்த உண்மைகள் அனைத்தும் மறைத்துவிட்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும் அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு FIR ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார். 


குற்றம் சாட்டப்பட்டவர் ஆக அறியப்படும் NRI உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ்தீப் சிங் ஆவார். அவரது தந்தை வரேந்திரஜித் சிங், தாய் சுக்வீர் கவுர், சகோதரர் கன்வர்தீப் சிங் மற்றும் 4வது மனைவி அவினாஷ் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகாஷ்தீப்புக்கு அவினாஷுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. மேலும் இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களுடைய நகை மற்றும் பணத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்கள். 


மேலும் பல லட்சம் மதிப்புள்ள பணத்தையும் மற்றும் நகைகளையும் அவர்களுக்கு தெரியாமல் அவர் அடகு வைத்ததாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல் நிலையத்தில், 406, 420, 494, 498A மற்றும் 120-B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் குற்றவாளியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. Dhiana 

Input & Image courtesy: Hindustantimes



Tags:    

Similar News